ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி- ஸ்டாலின் கூட்டு: அமைச்சர் ஜெயக்குமார் 

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Nov, 2018 07:36 pm
minister-jayakumar-press-meet

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரனும் சந்தித்தது உண்மை தான். அவர்கள் இருவரும் ஒட்டலில் சந்தித்துள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் அவர்கள் இருவரும் கூட்டு வைத்துள்ளனர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  “நந்தனம் மீனவர்களுக்கு அரசு பல திட்டங்களை செய்துவருகிறது. மழை காலத்தில் கடலுக்கு செல்லாமல் இருக்கும் மீனவர்களுக்கும் நிவாரணமாக 5 ஆயிரம் வழங்குகிறோம். தற்போது மீனவர்களுக்கு சேமிப்பு திட்டத்தை அரசு கொண்டு வருகிறது. 8 மாதம் சேமிப்பு வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 லட்சம் மீனவர்கள் பயனடைவார்கள். இந்த திட்டத்திற்காக 62 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. 

அதிமுக இயக்கத்திற்கு கட்டுப்பட்டு செயல்படுகிறோம். வன்முறையுடன் செயல்படவில்லை. அமமுகதான் பேனர் கிழிப்புக்கு காரணம், அதற்கு ஆதாரம் இருக்கிறது. சபாநாயகர்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். பருவமழையை எதிர் கொள்ள அரசு அனைத்தும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தமிழகத்தில் டெங்கு ஒழிக்க மக்கள் முழு ஒத்துழைப்பு அவசியம். ராஜபக்சே கொலையாளி தான் என ஜெயலலிதா தீர்மானம் போட்டார், அவர் தண்டிக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தமிழகம் உச்சத்தில் செல்லும் என பொன். ராதாகிருஷ்ணன் பேசுவது அவர் விருப்பம். ஆனால் எங்கள் ஆட்சியை குறை கூறவில்லை” என்றார். 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close