கமல்ஹாசன் அரசியலை படித்துவிட்டு வரவேண்டும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Nov, 2018 07:38 pm
kadambur-raju-press-meet

நடிகர் கமல்ஹாசன் அரசியல் அரிச்சுவடி அறியமால் காலடி எடுத்து வைத்துள்ளார் முதலில் அரசியலை படித்துவிட்டு பின் அரசியலுக்கு வரவேண்டும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்துள்ளார். 

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “பெரிய பட்ஜெட், ஸ்டார் வேல்யூ என்ற கூறி அதிக கட்டணம் வசூல் செய்தால் திரையரங்கு உரிமம் ரத்து  செய்யப்படும். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது, நிறுத்துவது கூறித்து தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்கும். நடிகர் கமல்ஹாசன் அரசியல் அரிசுவடி அறியமால் காலடி எடுத்து வைத்துள்ளார். அவசரப்படாமல் அரசியலை படித்துவிட்டு பின் வரவேண்டும், அரசியல் அவருக்கு சிறந்தது கிடையாது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் எந்த தொற்று நோய்களும் தமிழகத்தில் பரவலாக காணப்படவில்லை. பருவகால மாற்றத்தின் காரணமாகவே நோய்கள் வருகிறது. அதற்கு ஏற்ப வருமுன் காப்போம் என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. 

இது போன்ற நேரங்களில்  மு.க.ஸ்டாலின் மக்களுக்கு ஆலோசனை வழங்கலாம், ஆனால் மக்களை அச்சுறுத்தி, மக்களிடையே பீதியை ஏற்படுத்த கூடாது. எப்போதுமே மக்களை அச்சறுத்தி, பீதி ஏற்படுத்தி அரசியல் நடத்துவது திமுகவின் வாடிக்கையாகிவிட்டது. மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள் மாற்று அணிக்கு சென்ற காரணத்தினால் இன்றைக்கு தேவையில்லாத இடைத்தேர்தல் வந்துள்ளது, இனி மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களை ஒதுக்கிவிட்டு உண்மையான விசுவாசிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்து வெற்றி பெறுவோம். பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்று கூறினார். 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close