வங்கி கடன் வாங்குவதற்கு உத்திரவாத ஆவணங்கள் கேட்க கூடாது: நிர்மலா சீதாராமன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Nov, 2018 08:32 pm

nirmala-sitharaman-press-meet

பெண்கள் நடத்தும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன் வாங்குவதற்கு உத்திரவாத ஆவணங்கள் கேட்க கூடாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “பெண்கள் நடத்தும் சிறு,குறு,நடுத்தர தொழில் நிறுவனங்களில் இருந்து 3 சதவீதம் அரசு நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. பெண்கள் வங்கி கடன் வாங்குவதற்கு உத்திரவாத ஆவணங்களை வங்கிகள் கேட்க கூடாது. அப்படி கேட்பதாக வங்கிகள் மீது புகார்கள் வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் உள்ள 100 கிளஸ்டர் மையங்களில் தமிழகத்தில் கோவை,வேலூர்,திருவள்ளுர்,திருப்பூர்,மதுரை,திருச்சி,தஞ்சாவூர்,ஈரோடு ஆகிய பகுதிகள் இருப்பதாகவும், இதில் எது கிளஸ்டர் மையம் என்பதை பின்னர் தெரிவிக்கப்படும். மேலும் ஜாப்ஒர்க் செய்யும் சிறு,குறு,நடுத்தர தொழில் முனைவோருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொழில் முனைவோர் சங்கம் அமல்படுத்தவுள்ளது. மாநில அரசுக்கு முதல்வர் மூலமாக வந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசு கேட்கப்பட்ட நிதி உதவியை மத்திய அரசு முறையாக அளித்துவருகின்றது. ரபேல் விமான ஊழல் குறித்து கேள்விக்கு நிச்சயம் பதில் அளிப்பதாக தெரிவித்த, ராகுல் ரபேல் விமான பிரச்சினை குறித்து ஒவ்வொரு நாளும் மாறி மாறி விளக்கம் கொடுக்கிறார்” என தெரிவித்தார். 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close