புதுச்சேரியில் எப்போது பட்டாசு வெடிக்கலாம்?

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Nov, 2018 08:34 pm
puducherry-government-fixes-time-slot-for-bursting-crackers-on-diwali

புதுச்சேரியில் காலை 6 -7 மணிவரையிலும் மாலை 7 - 8 வரை பட்டாசு வெடிக்க வேண்டும் என மாசுகட்டுப்பாடு குழுமம் அறிவித்துள்ளது. 

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த 2 மணி நேரம் எப்போது என்பதை மாநில அரசு முடிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் வெடி வெடிக்கலாம் என தமிழக அரசு இன்று அறிவித்தது. 

இந்நிலையில் இதேபோன்று புதுச்சேரியில் உச்சநீதிமன்றம் அனுமதிப்படி தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் அறிவித்துள்ளது. மேலும் 125 டெசிபல் அளவிற்கு மேல் சத்தம் எழுப்பும் வெடிகளை பயன்படுத்தக்கூடாது என்று புதுச்சேரி அரசு மாசுக்கட்டுப்பாடு குழுமம் அறிவிறுத்தியுள்ளது.

Newstm.in 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close