ஏ.டி.எம் கொள்ளையனை பிடிக்க உதவிய பெண்மணிக்கு கமிஷனர் பாராட்டு

  சுஜாதா   | Last Modified : 03 Nov, 2018 08:29 am
the-police-commissioner-appreciated-the-woman-who-helped-to-arrest-the-robbery

சென்னை ஆவடியில் ஏ.டி.எம்மில் கொள்ளையடிக்க முயன்ற குற்றவாளியை பிடிக்க உதவிய பெண்மணிக்கு  சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டி பரிசளித்துள்ளார். 

கடந்த 1ஆம் தேதி, சென்னை ஆவடி பெருமாள் கோயில் தெருவில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம் மில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் ஸ்குரு டிரைவரால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளார்.  இதனை எதிர் வீட்டில் வசித்து வந்த சுமதி என்ற பெண்மணி கண்டு, உடனே  தனது மகன் செந்தில் மற்றும் வீட்டின் உரிமையாளர் சம்பத் ஆகியோரிடம் இதனை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த அவர்கள், தொடர்ந்து மர்ம நபரை பிடிக்க முயன்றுள்ளனர். 
   
இதற்குள் காவல் கட்டுப்பாட்டறையில் இருந்து அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்ற மர்ம நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதன் அடிப்படையில் ஏ.டி.எம்மில் கொள்ளையடிக்க முயன்ற குற்றவாளியை பிடிக்க உதவிய பெண்மணிக்கு  சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டி பரிசளித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close