தமிழகம் முழுவதும் 21,000 தீபாவளி சிறப்பு பேருந்துகள்!

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2018 11:01 am
diwali-special-bus

பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காகவும் சிரமமின்றி அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று சேரும் வகையிலும் தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து ஊர்களுக்கும் 21,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில் தமிழகம் முழுவதும் இருந்து 21,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மட்டும் மொத்தம் 11,367 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டுநவம்பர்  3,4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கட்கிழமை விடுமுறையென அறிவிக்கப்பட்டதால் இன்று முதலே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோயம்பேடு, கே.கே.நகர், பூவிருந்தவல்லி, மாதவரம், தாம்பரம் ரயில் நிலையம், மெப்ஸ் என மொத்தம் 6 இடங்களில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முதியவர்கள், பெண்கள், ஆண்களென அனைவருக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்ட 26 முன்பதிவு மையங்களும், 2 உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 9 நடைமேடைகளில் 3,4,5 மற்றும் 6 ஆகிய நடைமேடைகளில் முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளும் 1,2,7,8 மற்றும் 9 ஆகிய நடைமேடைகளில் முன்பதிவு செய்யப்படாத பேருந்துகளும் நிற்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் எந்தெந்த பேருந்துகள் எந்தெந்த நடைமேடைகளில் இருந்து இயங்கும் என்ற விவரங்களை பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் ஆறிவிப்பு பலகைகள் பேருந்து நிலையம் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தை சுற்றியும், பயணிகளின் பாதுகாப்பிற்காக 3 துணை ஆணையர்கள் தலைமையில் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் இனி வரும் இரண்டு நாட்களுக்குள் முன்பதிவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close