கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தான்: தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2018 11:04 am
transport-workers-strike

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வரும் 20ம் தேதிக்குள் நிறைவேற்ற அரசு முன்வராவிட்டால் வரும் 27ம் தேதி அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்துடன் இணைந்து போராட்டம் நடத்த உள்ளதாக தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள போக்குவரத்து தொழிற்சங்க கட்டிடத்தில் தொ.மு.ச,சி.ஐ.டி.யூ உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று மாலை 4 மணி முதல் ஆலோசனை நடத்தினர்.

ஏற்கனவே கடந்த 22,29,31 ஆகிய மூன்று தினங்களில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும்,வேலை நிறுத்தத்தின் போது பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட 86 தொழிலாளர்களுக்கு மீண்டும் அதே இடத்தில் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இன்று பல்லவன் இல்லம் முன்பு வாயிற் கூட்டம் நடத்தி வேலை நிறுத்தம் குறித்து அறிவிக்கப்படும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டாக தெரிவித்து இருந்த நிலையில் இன்று பேச்சுவார்த்தைக்கு பின்னர் பல்லவன் சாலையில் வாயிற் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தொ.மு.ச செயலாளர் சண்முகம், "போக்குவரத்து கழக தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கையை  வலியுறுத்தி ஜூன் மாதம் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்து அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்தது.

கடந்த 31ம் தேதி நடந்த  பேச்சுவார்த்தையின் போது ஏற்கனவே நிறைவேற்றுவோம் என்று அரசு தரப்பில் வாக்கு உறுதி கொடுத்த கோரிக்கைகளை பற்றி பேசாமல் அலட்சியம் காட்டினர். மேலும் அவர்கள் தான்தோன்றிதனமாக செயல்ப்பட்டதால் வேலை நிறுத்தம் குறித்து அறிவிக்கப்படும் என்று முடிவு செய்து இருந்தோம். இதன் அடிப்படையில் தான் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் போராட்டம் அறிவிப்பு பயத்தில் முன்பணம் வழங்க முன்வந்துள்ளார்.

வரும் 20ம் தேதிக்குள் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வராவிட்டால் வரும் 27ம் தேதி நடைபெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் போராட்டத்துடன் இணைந்து மிகப்பெரிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுகிறோம்.

தற்போது பொது மக்கள் நலன் கருதி தொழிலாளர்களின் பிரச்சனைகளை ஒத்திவைத்துள்ளோம், பொது மக்களும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மகக்ளோடு மக்களாக இருக்கும் என்பதை உணர வேண்டும்" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close