சென்ட்ரல், எழும்பூரில் கடும் நெரிசல்; ரயில்படிகளில் நின்று பயணம் செய்த மக்கள்!

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2018 11:47 am

diwalil-special-trains

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து செல்லும் ரயில்களில் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முன்பதிவில்லாத பெட்டிகளில் கடும் நெரிசல் இருந்ததோடு, மக்கள் படிகளில் நின்றபடி பயணம் செய்துள்ளனர். 

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களுடன் 5க்கும் மேற்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

தாம்பரத்தில் இருந்து அதிக அளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால், வழக்கத்தைவிட அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு 5க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூருக்கு 3, 5 தேதிகளில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோன்று நவம்பர் 4,7 தேதிகளில் திருநெல்வேலி, கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகின்றன. இதனால், அடுத்த சில நாட்களுக்கு பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். சென்னையில் இருந்து இதுவரை சுமார் 1 லட்சம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்" என்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close