தூத்துக்குடி பள்ளிகளுக்கு அவசர விடுமுறை! ஆட்சியர் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2018 01:22 pm
school-leave-in-thoothukudi-districts

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அம்மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை தொடங்கியதையடுத்து, தமிழ்கத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென் தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, நாகை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு வழக்கம் போல் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த அறிவிப்பு இன்று காலை தான் வந்துள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு சென்று விடுமுறை என தெரிந்து பின்னர் வீட்டிற்கு திரும்பினர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close