மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு!

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2018 01:38 pm
tn-govt-files-case-against-mk-stalin

முதல்வர் குறித்து அவதூறாக பேசியது, அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக, தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது சேலம் நீதிமன்றத்தில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

கடந்த செப்.18 ம் தேதி சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் மற்றும் தமிழக அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேசியதாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதன் அடிப்படையில் அரசு வழக்கறிஞர் தனசேகரன், ஸ்டாலின் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு செய்துள்ளார். முதல்வர்  குறித்து அவதூறாக பேசியது, அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக, ஸ்டாலின் மீது சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close