தென் தமிழகத்தில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2018 03:00 pm

weather-forecast

அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தற்போது மாலத்தீவு முதல் தெற்கு கொங்கன் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. மேலும், மாலத்தீவுகள் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாற்றில் 29 செ.மீ மழையும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 22 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரையில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் இடைவெளி விட்டு ஓரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும்” என தெரிவித்துள்ளார்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.