மத்திய அரசுக்கு தமிழகம்தான் அதிக வரி செலுத்துகிறது- தம்பிதுரை

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Nov, 2018 05:52 pm
thambi-durai-press-meet

தமிழகத்திலிருந்துதான் அதிக வரிப்பணம் மத்திய அரசுக்கு செல்கிறது. எனவே தமிழக திட்டங்களுக்காக மத்திய அரசு பணம் அளிக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 
 
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, “திட்டங்கள் செயல்படுத்துவது மாநில அரசுகள் தான். மாநில அரசுக்குதான் அதிகாரம் உள்ளது. தமிழகத்திலிருந்துதான் அதிக வரிப்பணம் மத்திய அரசுக்கு செல்கிறது. எனவே தமிழக திட்டங்களுக்காக மத்திய அரசு பணம் அளிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களை தத்தெடுத்தல் திட்டத்திற்கு இதுவரை பணம் ஒதுக்கவில்லை. அதற்காக நாடாளுமன்ற நிதியை பயன்படுத்த வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் ஓராண்டிற்கு 5 கோடி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. பல முறை கேட்டும் மத்திய அரசு இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. ஒரு கிராமத்தை தத்தெடுப்பு என்பது முடியாத காரியம். மற்ற கிராம மக்களிடையே எதிர்ப்பை சந்திக்க நேரிடும். அனைத்து கிராமத்தையும் தத்தெடுக்க வேண்டும், அப்போது தான் மக்கள் ஏற்று கொள்வார்கள். இல்லையெனில் தர்ம சங்கடம் ஏற்படும. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனால் வருத்தத்தில் உள்ளனர். மத்திய அரசு தான் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவது போலவும் மாநில அரசு எதுவும் செய்யவில்லை என்பது போன்ற கற்பனையான கருத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது வருந்தத்தக்கது” என்று கூறினார்.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close