20 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும்- ஈபிஎஸ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Nov, 2018 06:52 pm
edappadi-palanisamy-speech

20 தொகுதிகளில் அதிமுக 8 தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதையடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியதுள்ளது. டிசம்பர் மாதம் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தி முடிப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கட்சியினர் களமிறங்கியுள்ளனர். 

அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “20 தொகுதி இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். 20 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும். எனவே அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும். ஆர்.கே.நகரில் ஏற்பட்ட நிலையை நாம் மாற்றிக் காட்ட வேண்டும். நமது ஆட்சியை 5 ஆண்டுகள் முழுமையாக்க அவசியம் இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும்” எனக் கூறினார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close