ஜெயக்குமாரை விமர்சித்த வாலிபர் கைது!

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Nov, 2018 06:41 pm
jayakumar-issue

அமைச்சர் ஜெயக்குமாரை பற்றி சமூக வலைதளத்தில் விமர்சித்த வாலிபர் சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்பிய உடனே போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு கடலூரை சேர்ந்த வீரமுத்து என்ற வாலிபர் தனது முகநூல் பக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் அப்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. எனினும் வீரமுத்து சிங்கப்பூரில் வெல்டிங் தொழில் செய்து வந்ததால் அவரை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. தீபாவளி கொண்டாட இன்று காலை சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த வீரமுத்துவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி பிரகாஷ் முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தான் செய்தது தவறுதான் என வீரமுத்து மன்னிப்பு கோரினார். மன்னிப்பை ஏற்றுகொண்ட நீதிபதி செய்த தவறுக்கு ஊடகத்தின் முன்பு  மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் வீர முத்துவிற்கு ஜாமீன் வழங்கினார். இதையடுத்து ஊடகத்தினரிடம் மன்னிப்பு கேட்டார்.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close