சிறைக் கைதிகளுக்கு புத்தாடை: காவல் ஆணையர் வழங்கினார்

  டேவிட்   | Last Modified : 03 Nov, 2018 08:38 pm
deepavali-gifts-to-prisoners-by-cop

தீபாவளியை முன்னிட்டு, சைதாப்பேட்டை சிறைச்சாலையில் உள்ள குற்றவாளிகளுக்கு புத்தாடைகள், இனிப்புகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சென்னை பெருநகரில் 18 வயது முதல் 24 வயது வரையில் உள்ள நபர்களில் முதல் முறையாக குற்ற செயல்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்கள் நீதிமன்ற உத்தரவின்படி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்திலுள்ள கிளை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்கள்.

இந்நிலையில் தீபாவளிப் பண்டிகை 2 நாட்களில் வரவுள்ள நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், சைதாப்பேட்டை சிறைச்சாலையில் உள்ள 97 குற்றவாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் நல்ல வழியில் உழைத்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுபடி அறிவுரைகளும் வழங்கினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close