18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

  டேவிட்   | Last Modified : 03 Nov, 2018 11:07 pm
18-ips-officers-transferred-by-tamilnadu-government

தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் 18 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறைச்செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். 18 ஐபிஎஸ் அதிகாரிகளில் 9 பேருக்கு பதவி உயர்வும், 9 பேருக்கு பணியிட மாற்றமும் செய்து உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவின் படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருக்கும் கணேசமூர்த்தி மாற்றப்பட்டு டிஜிபி அலுவலக ஐஜி (பொது) ஆகவும்,  அயல்பணியில் பயிற்சியிலிருந்த டிஐஜி பாலகிருஷ்ணன் சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையராகவும், டிஜிபி அலுவலக நிர்வாக டிஐஜியாக இருந்த செந்தில்குமாரி ரெயில்வே டிஐஜியாகவும் (சென்னை) மாற்றப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலிலிருந்த எஸ்.பி விஜயகுமார் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாகவும், எஸ்பிசிஐடி எஸ்பியாக இருந்த ஜி.ராமர் அறிவுசார் சொத்துடமை அமல்பிரிவு எஸ்பியாகவும், அறிவுசார் சொத்துடமை அமல்பிரிவு எஸ்பியாக இருந்த தீபா கனிகர் போக்குவரத்து காவல் (மேற்கு) துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல், போக்குவரத்து காவல் (மேற்கு) துணை ஆணையராக இருந்த துரை திருவாரூர் எஸ்பியாகவும்,  திருவாரூர் எஸ்பியாக இருந்த விக்ரமன் சென்னை டிஜிபி அலுவலக தானியங்கி மின்னணுப்பிரிவு எஸ்பியாகவும், கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் லட்சுமி லஞ்ச ஒழிப்புத்துறை (மேற்கு) எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

வேலூர் தலைமையிட ஏஎஸ்பி அதிவீரப்பாண்டியன் பதவி உயர்த்தப்பட்டு டிஜிபி அலுவலக காவலர் நலன் எஸ்பியாகவும், திருச்சி அமலாக்கப்பிரிவு ஏஎஸ்பியாக இருக்கும் வி.ஆர்.ஸ்ரீனிவாசன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு அரியலூர் எஸ்பியாகவும், ஈரோடு அமலாக்கப்பிரிவு ஏஎஸ்பி பாலாஜி ஸ்ரீனிவாசன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு கோவை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், திண்டுக்கல் தலைமையிட ஏஎஸ்பி கே. பாலகிருஷ்ணன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு டிஜிபி அலுவலக உதவி ஐஜியாக (பணி வரன்முறை)வும், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையிட ஏஎஸ்பி கே.சண்முகம் பதவி உயர்வு அளிக்கப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை (தெற்கு) எஸ்பியாகவும், போலீஸ் அகாடமி ஏஏஸ்பி மீனா பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை தலைமையிட  பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறை ஏஎஸ்பி ஸ்டாலின் பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை தலைமை அலுவலக கட்டுப்பாட்டறை எஸ்பியாகவும், கோர்செல் சிஐடி சென்னை ஏஎஸ்பி சி.ராஜா பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை எஸ்பிசிஐடி எஸ்பியாகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close