கூட்டுறவு கடன் சங்க வங்கிப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: முதலமைச்சர் பழனிசாமி

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 10:52 am
co-op-loan-association-workers-gets-increment-tn-cm

கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 22 ஆயிரத்து 48 பணியாளர்கள் பயன்பெறுவதுடன், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.143.72 கோடி செலவு ஏற்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், "ஊதிய உயர்வு ஆய்வுக் குழுவும், வங்கி அதிகாரிகளும் அளித்த பரிந்துரைகளை ஏற்று புதிய ஊதிய உயர்வு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதிய உயர்வு ரூ.988-ம், அதிகபட்ச ஊதிய உயர்வு ரூ.4,613 வரையும் அளிக்கப்படும். இந்த ஊதிய உயர்வு கடந்த ஏப்ரல் மாதம் முதல் முன் தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் நடைமுறைப்படுத்தப்படும்.

மத்திய கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ரூ.1,114 முதல் அதிகபட்சமாக ரூ.16,963 வரையில் ஊதிய உயர்வு அளிக்கப்படும். இது கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் அளிக்கப்படும். நகர கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கு ரூ.455 முதல் அதிகபட்சமாக ரூ.16,485 வரையில் ஊதிய உயர்வு அளிக்கப்படும். இது, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்களைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ரூ.3,200 முதல் ரூ.12,500 வரை ஊதிய உயர்வு அளிக்கப்படும். இந்த ஊதிய உயர்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு நிலுவைத் தொகையுடன் அளிக்கப்படும்.

இதே போன்று, நகரக் கூட்டுறவு, தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ரூ.1,180 முதல் ரூ.28,000 வரையில் நிலைகளுக்கு ஏற்ப ஊதிய உயர்வு அளிக்கப்படும்.

இந்த ஊதிய உயர்வால் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 22 ஆயிரத்து 48 பணியாளர்கள் பயன் பெறுவர். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.143.72 கோடி கூடுதல் செலவு ஏற்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close