அனிதா பெயரில் 'aNEETa' செயலி உருவாக்கி தமிழக மாணவி சாதனை!

  Padmapriya   | Last Modified : 04 Nov, 2018 12:59 pm
an-app-for-neet-aspirants-in-memory-of-tamil-nadu-student-anitha

நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாதா விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா நினைவாக, டெல்லியைச் சேர்ந்த தமிழக மாணவி 'aNEETa' என்ற செயலியை உருவாக்கி சாதனைப்படைத்துள்ளார். 

கடந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு கண்டிப்பாக்கப்பட்டது. பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்காததால் மனமுடைந்த அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா,  தற்கொலை செய்துகொண்டார். 

இந்த நிலையில் அரியலூர் மாணவி அனிதா நினைவாக புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி இந்தச் செயலியை உருவாக்கியுள்ளார்.  டெல்லியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஸ் அதிகாரி ஜெகதீசன் என்பவரது மகள் இனியாள். இவர் டெல்லி சமஸ்கிருத பள்ளியில் படித்து வருகிறார்.  அவர் மாணவி அனிதாவின் நினைவாக 'aNEETa' என்ற செல்போன் செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலியில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு தேவையான மாதிரி வினாத்தாள்களும், தகவல்களும் இடம்பெற்றுள்ளன. 

''12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை எடுத்த போதும் மாணவி அனிதாவால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. நீட் தேர்வு எழுத பயிற்சி வேண்டும் என்பது புரிந்தது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த செயலியை 'aNEETa' உருவாக்கியுள்ளேன். அனிதாவின் நினைவாக அவரது பெயரை இதற்கு வைத்தேன்'' என்று இனியாள் கூறியுள்ளார். 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close