தீபாவளியன்று தென் தமிழகத்தில் மழை பொழியும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 02:24 pm
chennai-med-department-press-meet

தீபாவளி திருநாளன்று அன்று தென் தமிழகத்தில் மழை பொழியும் என்றும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைப்பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், "வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பொழிந்துள்ளது. அதிகபட்சமாக பாபநாசத்தில் 15 செ.மீட்டர் மழையும், மணிமுத்தாரில் 6 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

தெற்கு வங்ககடல் மத்திய பகுதியில் வரும் நவம்பர் 6ம் தேதியையொட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் குமரிக்கடல் பகுதியில் வரும் நவம்பர் 6 முதல் 8 தேதிக்கு இடையே கடக்கக்கூடும்.

இதன் காரணமாக வடகிழக்குப்பருவமழை நவ 6 முதல் 8ம் தேதிவரை வலுப்பெறும். மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் இப்பகுதியில் பலத்த காற்றானது மணிக்கு 50 கி. மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 6 மற்றும் 7 தேதிகளிலும், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 7 மற்றும் 8 தேதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆழ்க்கடல் பகுதிகளில் இருக்கும் மீனவர்கள் வரும் 6 தேதிக்குள் கரைக்கு திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அடுத்து 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைப்பெய்யக்கூடும். 

தீபாவளியன்றுதென் தமிழகத்தில் அதிக மழை இருக்கும், வட தமிழகத்தில் அவ்வளவாக இருக்காது" என்றார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close