பட்டாசு வெடிகும் போது நீதிமன்ற உத்தரவை மீறினால் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 03:17 pm
tamil-nadu-police-department-warns-about-cracker-bursting-in-deepavali

பட்டாசு வெடிக்கும் போது நீதிமன்றம் விதித்திருக்கும் உத்தரவுகளை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. 

தீபாவளியன்று  2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டது. இதனையடுத்து அந்த கால அளவை மாற்ற தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.இதனையடுத்து இரண்டு மணி நேரத்தை காலை மாலை என பிரித்துக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. பின் தமிழகத்தில் காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அந்த காவல் நிலைய எல்லைக்குள் ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் 6 மாதம் ஜெயில் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்தும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close