நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை!

  சுஜாதா   | Last Modified : 05 Nov, 2018 06:58 am
6-months-imprisonment-if-fireworks-erupt-in-violation-of-court-verdict

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால், ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கோலாகலமாக நாளை கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையின் போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து  தமிழக அரசு தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்று நேரம் நிர்ணயித்தது.

இந்நிலையில் தற்போது பொதுமக்கள் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அதிக ஒலி எழுப்பக்கூடிய சரவெடி போன்ற பட்டாசுகள் வெடிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்கவும், பட்டாசு கடைகளில் பட்டாசு விற்பனை செய்வதை கண்காணிக்கவும், தமிழகம் முழுவதும் சுமார் 500 கண்காணிப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, பட்டாசு வெடித்தால், இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க வழிவகை உள்ளது. எனவே பொதுமக்களும், பட்டாசு வியாபாரிகளும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறாமல் நடந்துகொள்ள வேண்டும் என்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த திடீர் உத்தரவால் பொது மக்கள் பட்டாசு வெடிப்பதில் அதிக ஆர்வம் இல்லாமல் அதிருப்தியில் உள்ளனர். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close