மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் – தீபாவளி வாழ்த்து செய்தி

  சுஜாதா   | Last Modified : 05 Nov, 2018 07:27 am
union-minister-pon-radhakrishnan-extend-deepavali-greetings

தீபாவளி பண்டிகை நாளை (செவ்வாய்க் கிழமை) கொண்டாடப்படவுள்ள நிலையில் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பொது மக்கள் அனைவர்க்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் கூறியுள்ள வாழ்த்து செய்தி: அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.  இந்த இனிய தீபாவளி நாளில் உங்கள் குடும்பங்களில் செல்வம் செழித்து, மகிழ்ச்சி பொங்கி வருகின்ற காலங்களில் குதூகலமான ஒரு குடும்பமாக உங்கள் குடும்பம் விளங்குவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய பிரார்த்திக்கிறேன்.

இந்த தீபாவளி திருநாள் நமது நாட்டின் சரித்திரத்தில் மிக முக்கியமான நாளாக உருவாகியிருக்கின்றது.  காரணம் கடந்த நான்கரை ஆண்டுகளாக நமது நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற பிரதமர் நரேந்திர மோடி ஏராளமான திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறார்.  எனினும்கூட, இந்த தீபாவளி பரிசாக அவர் நம் நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கக் கூடிய மிக அற்புதமான திட்டம், இந்த நாட்டில் ஆறு கோடிக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கின்ற சிறு, குறு, தொழில் முனைவோர்களுக்கான முன்னேற்றத்திற்காகவும், தொழிலை விரிவுபடுத்துவதற்காகவும், பொருளாதார வசதிகளுக்காகவும் ஒரு தொலைபேசி அழைப்பு மூலமாக ஒரு கோடி ரூபாய்க்கு உட்பட்ட தேவைகளை பதிவு செய்வார்கள் என்று சொன்னால், வங்கி மூலமாக 59 நிமிடத்திற்குள்ளாக அவரது முறையாக கோரிக்கை ஏற்கப்பட்டு, ஒரு கோடி ரூபாய்க்கான கடன் வசதி செய்து கொடுக்கும் வகையில் பிரதமர்  நரேந்திர மோடி இந்த தீபாவளி பரிசை அறிவித்திருக்கின்றார்.

ஏறக்குறைய பதினொன்றரை கோடி மக்கள் தொழில் புரியும் சிறு, குறு தொழில் மையங்களுடைய முன்னேற்றத்திற்கு இது பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close