என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 09:00 am

kamalhassan-s-request-to-his-fans

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.இவரது பிறந்த நாள் வரும் 7ம் தேதி வருகிறது. இந்த நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டு நலத்திட்ட உதவிகள் செய்யுமாறு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். கேக் வெட்டுதல் உள்ளிட்ட ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். ரத்த தானம் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.