சென்னை - ஊர்க்காவல் படை ஆளிநர்களுக்கு ஆணையர் பாராட்டு

  டேவிட்   | Last Modified : 05 Nov, 2018 04:20 pm
a-k-viswanathan-wishes-to-homeguards

உதவி ஆய்வாளரை அறையில் மூடிவிட்டு தப்ப முயன்ற 2 குற்றவாளிகளை விரட்டி பிடித்த ஊர்க்காவல் படை ஆளிநர்கள் மற்றும் பெண் காவலரை சென்னை பெருநகர காவல ஆணையர் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் பயணிகளின் கவனத்தை திசை திருப்பி அவர்களது உடமைகள் மற்றும் அலைபேசிகளை திருடிச் செல்லும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அவதேஷ் ராய் மற்றும் முந்த்ரா குமார் ஆகிய இரண்டு பேரை பெரியமேடு காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

இந்நிலையில் விசாரணைக்காக காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பேரும் அப்போது பணியில் இருந்த நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரனை அறையில் வைத்து மூடிவிட்டு குற்றவாளிகள் இருவரும் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடினர். அப்போது வெளியில் பணியில் இருந்த ஊர்க்காவல் படை சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, வாகனம் ஓட்டும் காவலர் கிருஷ்ணராஜ் மற்றும் முதல்நிலை பெண் காவலர் வேதநாயகி ஆகியோர் குற்றவாளிகள் ஓடுவதைக் கண்டு அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து குற்றவாளிகள் இருவரும் திருடிய பொருட்களை தங்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காக, வரும் 7 ஆம் தேதி விமானத்தில் பயணச் சீட்டு பதிவு செய்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 6 அலைபேசிகளும், விமான பயணச் சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொரர்ந்து காவல்துறையினர் குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், 2 குற்றவாளிகளையும் துரத்திச் சென்று மடக்கி பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, ஓட்டுநர் கிருஷ்ணராஜ், முதல்நிலை பெண் காவலர் வேதநாயகி ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாரட்டுக்களை தெரிவித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close