சென்னை : மணலி உதவி ஆய்வாளர் மீது புகார் 

  டேவிட்   | Last Modified : 05 Nov, 2018 04:32 pm
complaint-against-sub-inspector

சென்னை : மணலி உதவி ஆய்வாளர் மீது புகார் 

தன்னுடைய நிலத்தை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் அபகரித்துவிட்டதாகக் கூறி அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சங்கர் என்பவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை மணலியை அடுத்த புதுநகர் வெள்ளிவாயல் பகுதியில் வசிப்பவர் சங்கர். இவருக்கு சொந்தமாக அப்பகுதில் 15 செண்ட் நிலம் உள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அதே பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பவர் தனது மாடுகளை தன்னுடைய நிலத்தில் கட்ட அவகாசம் கோரி தனது மாடுகளை அங்கு கட்டியதாகவும், சில நாட்களுக்கு பிறகு சதீஷ் தனது மாடுகளை கட்டியிருந்த இடத்தில் தளம் அமைக்கவே அதை தட்டி கேட்டபோது உனது இடத்தை தரமுடியாது எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சங்கர், மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் மனமுடைந்த சங்கர் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக தெரிவித்த அவர், சதீஷ் என்ற உதவி ஆய்வாளர் தன்னுடைய நிலத்தை அபகரித்து விட்டதாகவும், தனது நிலத்தை மீட்டு சதீஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close