சென்னை : மதுவை ஊக்குவித்து விளம்பரம் செய்த மேலாளர், உதவியாளர் கைது 

  டேவிட்   | Last Modified : 05 Nov, 2018 04:41 pm
2-arrested-in-triplicane-for-tasmac-advt

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள மதுபானக் கடையில் முறையான அனுமதி பெறாமல் கடை விளம்பரத்திற்காக பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கிய பார் மேலாளர் மற்றும் உதவியாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள வல்லபா அக்ரஹார தெருவில் உள்ள தனியார் மதுபானக் கடையில், 1000 ரூபாய்க்கு மேல் மது அருந்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் எல்.ஈ.டி.  டி.வி, குளிர்சாதன பெட்டி மற்றும் துணி துவைக்கும் இயந்திரம் வழங்கப்படும் எனக் கூறி கடையின் விளம்பரத்திற்காக 3 விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டதோடு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

 மதுவை ஊக்குவிப்பதாக கூறி இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஜாம் பஜார் சட்ட ஒழுங்கு காவல்துறையினர், மதுபானக் கடையின் மேலாளர் வின்சண்ட் ராஜ் மற்றும் உதவியாளர் ரியாஸ் அகமத் ஆகிய இருவரை கைது செய்ததோடு மதுபானக் கடையில் வைக்கப்பட்டிருந்த எல்.ஈ.டி டி.வி, குளிர்சாதனப் பெட்டி மற்றும் துணி துவைக்கும் இயந்திதம் முதலியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close