தீபாவளி ஜோக்ஸ்

  பாரதி பித்தன்   | Last Modified : 06 Nov, 2018 07:55 am

diwali-jokes

தீபாவளி ஜோக்ஸ்

 

மனைவி: ஏங்க தீபாவளிக்கு முதல் நாள் தான் புடவை எடுத்து தருவேன் என்று சொல்லுரீங்க

கணவன் மைண்ட் வாய்ஸ்: அப்பதானே நீ செலக்ட் பண்ணுறதுக்குள்ள தீபாவளியே முடிந்து போய்விடும்.

**

நீதிபதி: ஏய்யா மத்தியானம் போலீஸ் ஸ்டேஷன் முன்னால வெடி வெடிச்ச

குற்றவாளி: வெளியே வேலை பார்த்து வாழ முடியவில்லையா வெடி வெடிச்சா 6 மாதம் நிம்மதியா ஜெயிலில் இருக்கலாம் என்றுதான்

**

கணவன்: ஏண்டி நீ செய்த மைசூர்பாகை வீதி இருக்கிறவுங்களுக்கு சாம்பிள் கொடுக்காதேன்னு சொன்னேனே கேட்டியா?

மனைவி ஏங்க

கணவன்: இப்படி பாரு எல்லாரும் வீட்டு வாசலிலேயே ஸ்வீட் கொடுத்து விட்டு ஓடிட்டாங்க

**

கணவன் என்னடி ஆச்சு உன்னை சுத்தி இவ்வளவு பேர் நிற்கிறாங்க என்ன ஆச்சு
மனைவி: நான் செஞ்ச அல்லாவை தின்ன மாமியார் வாயே திறக்க முடியவில்லை என்று சொன்னேன்
அதான் தங்களுக்கும் செய்து தர சொல்லி நிற்கிறாங்க

**

டவாலி: யோவ் அந்த ஜட்ஜ் எல்லாம் பார்க்க முடியாது போய்யா
முதியவர்: இல்ல சாமி அவரு தீபாவளி கொண்டாடுவதே சட்ட விரோதம் தீர்ப்பு கொடுத்தா கடன் வாங்கிற தொல்லையாவது இல்லாம போய்விடும்.

 **

கமலா: ஏய் நம்ம வீதில புள்ளைபிடிக்கிறவங்கள நுழைந்துவிட்டாங்கடி

விமலா: இல்ல இல்லநம்ம ஏட்டையா தான் வெடி வெடிச்ச பசங்கள கூட்டிக்கிட்டு போறாங்க

**

ராமு: ஆபீசில வாட்ஸ் அப் நோண்டாதேன்னு சொன்னேனே கேட்டியா

சோமு: என்ன ஆசுசு

ராமு: முதலாளி போனசையும் வாட்ஸ் அப் மெசேஜா போட்டுவிட்டார்.

 

ராமு: தலை தீபாவளிக்கு மாமனார் என்ன வாங்கி கொடுத்தார்

சோமு: அஜித் பட சிடி 10 வாங்கி கொடுத்து இதான் மாப்பிள்ளை தல தீபாவளி அப்படின்னு சொல்லிட்டார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close