கோயில் கும்பாபிஷேக விழாவில் ஒயிலாட்டம் ஆடிய அமைச்சர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 06 Nov, 2018 08:39 am
sp-velumani-dance

கோயில் கும்பாபிஷேக விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டம் ஆடியதை பொதுமக்கள் கண்டு உற்சாகம் அடைந்தனர்.

கோவை கைகோலபாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுகுட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வழிபட்டனர். பின்னர் விழாவில் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் நடைபெற்றது. அப்பகுதி பொதுமக்கள் சிலர் நடமாடினர். அவர்களோடு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஆறுகுட்டி ஆகியோர் நடனமாடினர். அவர்களின் நடனத்தைக் கண்ட பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.

அமைச்சர், எம்எல்ஏ மட்டுமல்லாமல் அங்கிருந்த அதிமுகவினரும் இணைந்து உற்சாகத்துடன் நடனமாடினர். அவர்களின் நடனத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close