தீபாவளியை முன்னிட்டு, திரையரங்குகளில் கூடுதல் காட்சி!

  ஐஸ்வர்யா   | Last Modified : 06 Nov, 2018 07:44 am
extra-shows-for-diwali

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 7 முதல் 9ஆம் தேதி வரை திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் 5 காட்சிகளும், இதர நாட்களில் 4 காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதி வழங்குமாறு, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஏற்கெனவே 5 காட்சிகள் வெளியிட அனுமதி அளிக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாட்களில், நாள்தோறும் 4 காட்சிகள் மட்டுமே அனுமதி இருக்கும் நிலையில், நவம்பர் 7, 8, 9 ஆகிய நாட்களிலும், நவம்பர் 12ஆம் தேதியும் கூடுதலாக ஒரு காட்சியை திரையிடலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close