வெடிக்கு தடை, குடிக்கு தடையில்லை: தமிழிசை ட்வீட்

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 10:27 am

tamilisai-tweet-about-control-over-cracker-bursting

பட்டாசுகளுக்கு தடை விதித்திருப்பது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஒரு நாளுக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

 

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) November 5, 2018

 

தமிழகத்தில் காலை 6-7 மற்றும் இரவு 7-8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுபாடு போடப்பட்டது குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், " வெடி வெடிக்க தடை. குடிகுடிக்கத்தடை இல்லை. வெடிக்க கால நிர்ணயம்... குடிப்பதற்கு காசு நிர்ணயம்... கோடிகளில் இலக்கு? எங்கே செல்கிறோம்?" என்று பதிவிட்டுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close