சென்னையில் கலையிழந்த தீபாவளி கொண்டாட்டம்

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 11:18 am
dull-diwali-for-chennaities-this-year

நாடு முழுவதும் தீப ஒளித் திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பண்டிகை நாள் கலை இழந்து காணப்படுகிறது.

தீப ஒளித் திருநாள் என்றாலே அதிகாலை முதலே பட்டாசு சத்தம் காதை பிளப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பட்டாசுகள் வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், தமிழக அரசு காலை 6-7 மணி வரையும் மாலை 7-8 மணி வரையும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளித்தது. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தீப ஒளித் திருநாள் கலை இழந்து காணப்படுகிறது. சென்னையின் வீதிகளில் கலகலப்பாக ஓடியாடி பட்டாசுகள் வெடிக்கும், சிறுவர்களின் குறும்பும் களிப்பும் இந்த ஆண்டு வீட்டினுள் முடங்கி கிடப்பதையே ஆளரவமின்றிக் கிடக்கும் வீதிகள் நமக்கு உணர்த்துகின்றன.

தீபாவளி திருநாள் விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து வந்து சென்னையில் பணிபுரியும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால், எப்பொழுதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் சென்னையின் முக்கிய சாலைகளான உத்தமர் காந்தி சாலை, அண்ணா சாலை, ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட சாலைகள் போக்குவரத்து நெரிசல் இன்றி வெறிச்சோடி காட்சியளிக்கிறது.

பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்ட காரணத்தால் இன்று தங்களது வருமானம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும், மாநகர பேருந்துகள் கூட கூட்டமின்றி காணப்படுவதாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close