காவல்துறையினருடன் தீபாவளி கொண்டாடிய கமிஷனர்!

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 02:40 pm
diwali-celebration-commissioner-celebrates-with-co-workers

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களுடன் சென்னை காவல் ஆணையர் அ.கா விஸ்வநாதன் இனிப்புகள் வழங்கி தீபாவளியை கொண்டாடினார்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களுடன் சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா விஸ்வநாதன் இனிப்புகள் வழங்கி தீபாவளி திருநாளை கொண்டாடினார். மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் ராமர் தனது 30 ஆண்டுகால பணிக்காலத்தில் காவல் ஆணையர் நேரில் வந்து இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்து கூறியது, மறக்க முடியாத நிகழ்வு என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு, ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவு துணை ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close