தமிழகம்:  உத்தரவு  மீறி பட்டாசு வெடித்த 786 பேர் மீது  போலீசார் வழக்குப்பதிவு! 

  சுஜாதா   | Last Modified : 07 Nov, 2018 07:28 am

police-file-case-against-786-people-for-bursting-crackers

தமிழகத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 786 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன் விவரம், சென்னை - 97, கடலூர் - 13, விழுப்புரம் - 255, நாமக்கல் - 7, ஈரோடு - 7, தஞ்சை - 10, சேலம் - 50, கொடைக்கானல் - 2, வேலூர் - 2, நெல்லை - 31, விருதுநகர் - 80, கோவை - 85, திருப்பூர் - 57, அரியலூர் - 14 என இதுவரை 786 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, தீபாவளி பண்டிகையன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்திருந்தது.  இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தமிழக அரசு  காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close