சென்னையில் காற்று மாசு குறைந்தது: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2018 08:24 am

diwali-celebration-air-pollution-decreased-in-chennai

தீபாவளி திருநாளில் சென்னையில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், தீபாவளியன்று பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கும் நேரமாக அரசு அறிவித்திருந்தது.

தீபாவளி அன்று சென்னையில் காற்றின் தரத்தை கண்டறிய பல இடங்களில் குறிப்பாக திருவல்லிக்கேணி, தியாகராயநகர், வேளச்சேரி என காற்று மாசை அளக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது.

இதுகுறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுவாக வழக்கமான நாள்களை விட தீபாவளி அன்று பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதால் அதனால் ஏற்படும் புகையினால் காற்று மாசு அபாய அளவை எட்டும். இதனை தொடர்ந்து கண்காணித்து வரும் மாசு கட்டுப்பாடு வாரியம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று சென்னையில் குறைந்த அளவு காற்று மாசு பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

டெல்லியில் சராசரி காற்று மாசு 349 குறியீடு என மிகவும் அபாய அளவில் உள்ளது. டெல்லியை ஒப்பிடும் போது, சென்னையில் சாதாரண அளவில் காற்று மாசு 65 குறியீடாக பதிவாகி இருந்ததாகவும், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் காற்று மாசு குறியீடு 87 ஆகவும், ஆக்ராவில் 353 என்ற அளவிலும் பதிவாகி உள்ளது . வட மாநிலங்களை விட சென்னையில் மிகவும் குறைந்த அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.  

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.