சென்னை:  பட்டாசு வெடித்த சிறுவர்கள், இளைஞர்கள் மீது வழக்கு

  டேவிட்   | Last Modified : 07 Nov, 2018 12:46 pm

1500-cases-for-using-crackers-in-untiming

தமிழகம் முழுவதும் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசுகள் வெடித்த 1500 க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையில் மட்டும் 345 பேர் மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மாசு பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் தீபஒளித் திருநாள் அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன்படி தமிழக அரசு தீபஒளித் திருநாள் அன்று காலை 6-7 மணி வரையும் மாலை 7-8 மணி வரையும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளித்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவையும் மீறி தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பட்டாசுகள் வெடித்து தீபஒளித் திருநாளை கொண்டாடினர்.

இந்நிலையில் இன்று காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசுகள் வெடித்ததற்காக 1500 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 343 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி நீதிமன்ற உத்தரவை மீறுதல் மற்றும் வெடி பொருட்களை தவறாக கையாளுதல் என 180 மற்றும் 285 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.