சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குக: நடிகர் விஜய்க்கு அமைச்சர் எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2018 01:21 pm
minister-kadambur-raju-warns-actor-vijay

விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள "சர்கார்" திரைப்படம் தீபாவளியையொட்டி நேற்று நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் தற்போதுள்ள தமிழக அரசியல் சூழல் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விஜய் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "சர்கார் படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை அவர்களாகவே நீக்கிவிட்டால் நல்லது. இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 

நடிகர் விஜய் வளர்ந்து வரும் நடிகர். இது அவருக்கு நல்லதல்ல. எனவே சர்கார் சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

சர்கார் கதை விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது படத்திற்கு அடுத்த சர்ச்சை உருவாகியுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close