சர்காருக்கு வந்த சோதனை! கடம்பூர் ராஜூவை தொடர்ந்து ஹெச்.ராஜா ட்வீட்!

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2018 01:40 pm
h-raja-tweet-abour-sarkar

விஜய் நடித்துள்ள சர்கார் படம் குறித்து பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள "சர்கார்" திரைப்படம் தீபாவளியையொட்டி நேற்று நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் தற்போதுள்ள தமிழக அரசியல் சூழல் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒருபக்கம் இது அரசியல் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், மற்றொரு பக்கம் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர்களாகவே நீக்கிவிட்டால் நல்லது, இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

இதையடுத்து பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் சர்கார் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், "படித்ததில் பிடித்தது...கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா..நல்ல கதையா திருடுங்கடா.." என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, சர்கார் கதை விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது இப்படத்திற்கு அடுத்தடுத்த சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close