ரயில்வே துறையின் சுற்றுலா ரயில் திட்டத்தில் கூடுதல் இடங்கள் இணைப்பு!

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2018 01:52 pm
railways-to-add-some-extra-places-for-tourism

ரயில்வே துறையின் பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தில் கூடுதல் சுற்றுலாத்தலங்கள் இணைக்கப்படவுள்ளதாக கூடுதல் தென்னிந்திய இரயில்வே பொதுமேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியன் ரயில்வேயும் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும் இணைந்து பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது. தற்போது கூடுதலாக இன்னும் பிற சுற்றுல தலங்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது அதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து, கூடுதல் தென்னிந்திய இரயில்வே பொதுமேலாளர் ரவிக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: 

வரும் 14 ஆம் தேதி இராமாயண யாத்திரை என்ற புதிய திட்டத்தை இந்திய ரயில்வேயும் ,இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகமும் இணைந்து இந்தாண்டு துவங்கியுள்ளது.இந்த இரயி ல் வரும் 14 ஆம் தேதி மதுரையில் புறப்பட்டு ஹம்பி(கர்நாடகா) நாசிக் வழியாக சித்திரகூடம்(உ.பி) ,தர்பங்கா(பீகார்,அயோத்தியா(உ.பி) நந்திகிராமம்(மேற்கு வங்கம்) அலகாபாத்(உ.பி) ஆகிய இடங்களை கடந்து நேபாளத்தில் சீதை பிறந்த இடமாக கருதப்படும் ஜனக்புரிக்கும் சென்று தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் ,திருப்புல்லாணி, தேவிபட்டினம் வந்தடைகிறது. இறுதியில் மதுரையில் இந்த இரயில் பயணம் நிறைவடைகிறது.

15 நாட்கள் கொண்ட இந்த இரயில் யாத்திரைக்கு கட்டணமாக ரூ.15,830 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மூன்று வேளை தென்னிந்திய உணவு வழங்கப்படுவதுடன் இரயில் பெட்டிகளில் பாதுகாப்புக்காக ஆள்களும் அமர்த்தபட இருப்பதாக ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.

மேலும் ஹைதராபாத் ,அஜந்தா ,மும்பை மற்றும் கோவா வரை சிறப்பு சுற்றுலா இரயில் பயணத்தையும் ஐ.இ.சி.டி.சி அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் டிசம்பர் 2 ஆம் தேதி மதுரையிலிருந்து இந்த இரயில் புறப்பட்டு திண்டுக்கல், கரூர் ,ஈரோடு சேலம் வழியாக பெங்களூர்  மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக  ஹைதராபாத், ஒளரங்காபாத்  சென்று மும்பை மற்றும் கோவா ஆகிய இடங்களை காண இந்த இரயில் பயணத்திற்கு 10 நாட்களுக்கு ரூ.10,100 கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.

கோவாவிற்கு 5 நாட்கள் சிறப்பு இரயிலும் இயக்க திட்டமிட்டுள்ளது  வரும் டிசம்பர் 14 அன்று மதுரையிலிருந்து புறப்படும் இந்த இரயில் திண்டுக்கல் ,திருச்சி வழியாக  5 நாட்கள் பயணமாக கோவா செல்கிறது. இதற்கு கட்டணமாக ரு.4,725 நிர்ணயிக்கப்பட்டுள்ளது மேலும், மூகாம்பிகை மற்றும் கர்நாடக ஆலயங்களுக்கு யாத்திரை என்ற புதிய திட்டத்தையும் ஐ.ஆர்.சி.டி.சி துவங்கியுள்ளது.

வரும் டிசம்பர் 14 ஆம் தேதி மதுரையிலிருந்து புறப்படும் இந்த இரயில் திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை வழியாக காட்பாடி சென்று கோவையை கடந்து உடுப்பி கிருஷ்ணர் ஆகிய ஆலயங்களை கடந்து  5 நாட்கள் பயணமான கர்நாடக ஆலய இரயில் பயணத்திற்கு ரூ.6,930 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பயணங்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி யின் சென்னை, மதுரை மற்றும் கோயம்பத்தூரில் உள்ள சுற்றுலா தகவல் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்தப்பட்டுள்ளது

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close