சென்னை: மயிலாப்பூரில் வாலிபர் சடலம் கண்டெடுப்பு

  டேவிட்   | Last Modified : 07 Nov, 2018 02:35 pm
dead-body-found-at-mylapore

சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் பாலத்தடியில் வாலிபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் மன்னா. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் பாசறையில் 125வது வட்ட அமைப்பாளராக இருந்து வருகிறார். மூன்று தினங்களுக்கு முன் இவர் காணாமல் போனதாகக் கூறி இவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் அவரது உடல் மீனாம்பாள்புரம் கூவத்தில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தகல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது மரணம் கொலையா அல்லது மது போதையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீனாம்பாள்புரம் கூவத்தின் கரையில் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் மது அருந்திவிட்டுச் செல்வதும் தகறாரில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close