தமிழகம் முழுவதும் 232 தீ விபத்துகள் 

  டேவிட்   | Last Modified : 07 Nov, 2018 03:07 pm
232-fire-accidents-in-tamilnadu


தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் மட்டும் 228 சிறிய தீ விபத்துக்களும், மேலும் நான்கு அதிக பாதிப்பில்லாத தீ விபத்துக்களும் ஏற்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை அறிவித்துள்ளது. 

இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம் முழுவதிலும் இருந்து தீ விபத்து குறித்து 232 அழைப்புகள் வந்தன என்றும், இவற்றில் 228 சிறிய தீ விபத்துக்களும், மேலும் நான்கு அதிக பாதிப்பில்லாத தீ விபத்துக்களும் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், சென்னையைப் பொருத்தவரை 57 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்ச் சேதம் குறித்து தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close