தீபாவளி சிறப்பு! ரூ.602 கோடிக்கு டாஸ்மாக்கில் அமோக மது விற்பனை!!

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2018 04:22 pm
tasmac-sale-during-diwali-holidays

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டிய நான்கு நாட்களில் தமிழகம் முழுவதும் மொத்தம் 602 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை நடந்திருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. 

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் துறையினால் மதுபான விற்பனை 350 கோடி ரூபாய்க்கு நடத்தப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை 124 கோடி ரூபாய்க்கும், ஞாயிற்றுக்கிழமை 150 கோடி ரூபாய்க்கும், திங்கள் கிழமை 148 கோடி ரூபாய்க்கும், தீபாவளி நாளான செவ்வாய்க்கிழமை 180 கோடி ரூபாய்க்கும் மதுபான விற்பனை நடைபெற்றிருப்பதாக டாஸ்மாக் ஊழியர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டதால் விற்பனையின் அளவு அதிகரித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டை பொறுத்த வரையில் அக்டோபர் 18  ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. அன்றய தினமும் அதற்கு முந்தைய தினமும் மொத்தமாக 244 கோடி ரூபாய் மது விற்பனையாகி இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மது விற்பனையானது இந்த ஆண்டு 34.5% அதிகரித்திருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close