தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Nov, 2018 05:21 pm
chances-to-rain

தென் தமிழகம் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதன் வலு குறைந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக குமரிக்கடல் பகுதிகளில் தற்போது நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று தென் மேற்கு வங்க கடலில் நிலவி இருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுக்குறைந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளது. இதன்காரணமாக மீனவர்கள் குமரிக்கடல், மத்திய இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதே போல் வரும் 9ம் தேதி அந்தமான் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newstm.in
 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close