தமிழகத்திற்கும் நல்ல பிறந்தநாள் வரும்- கமல்ஹாசன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Nov, 2018 06:38 pm
kamalhassan-press-meet

தமிழகத்திற்கு நல்ல பிறந்தநாள் விரைவில் பிறக்கும். அப்போது அரசியல் மாற்றம் ஏற்படும் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இன்று பிறந்தநாளை கொண்டாடிய கமல்ஹாசன், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  “20 தொகுதி இடைத்தேர்தலுக்கு 80 சதவீதம் எங்கள் தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். விரைவில் தேர்தல் நடைபெறும் என நினைக்கிறோம். தமிழகத்தில் சுகாதாரமான அரசியல் இருக்க வேண்டும் என்பதற்காகதான் இடைத்தேர்தலில் மக்களை சந்திக்கவுள்ளேன்.  தேர்தலில் பணம் கொடுக்கும் முறைக்கேட்டை மாற்ற மக்களிடம் தேர்தல் களத்தை சந்திப்பேன். மக்களை சந்தித்து அவர்களிடம் வாக்குறுதியை கேட்டு பெற்றுக் கொள்வேன். நாட்டை ஆள வேண்டியவர்கள் மக்கள் தான். நாடாளுமன்ற தேர்தலிலும் மக்களை சந்திப்பேன். ஆனால் எனக்கு தேர்தல் ராசி எப்படி இருக்கும் என்ற ஜோசியத்தை தற்போது சொல்ல முடியாது.

தமிழகத்தில் தமிழில் தேர்வு எழுத இடமில்லை என்ற சொல்ல கூடாது. வட இந்தியாவில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தமிழக அரசியல் கட்சிகளை பற்றி கடுமையாக விமர்சிக்க நாங்கள் விரும்பவில்லை. ரபேல் ஊழல் பற்றி பேசியுள்ளேன். நான் மக்களின் கருவியாக இருக்கிறேன். நாங்கள் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. இன்னும் சில மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். இலங்கை அரசியல் பற்றி பேசுவதற்கு நமக்கு தகுதியே இல்லை ஏனெனில் தமிழக அரசியல் சீர்க்கெட்டுள்ளது” என்றார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close