ஓய்வூதியதாரர் கவனத்திற்கு : டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம்

  சுஜாதா   | Last Modified : 08 Nov, 2018 11:38 am
pensioners-should-submit-digital-life-certificate-epfo

தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் 1995 -இன் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் முறையில் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்று சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அறிவித்துள்ளது

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், ஓய்வூதியதாரர்கள், தங்கள் உயிர்வாழ் சான்றிதழை ஓய்வூதியம் பெறும் வங்கிக்கிளை, இ-சேவை மையம், வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஆகியவற்றில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில், ஓய்வு ஊதியம் ஜனவரி மாதம் முதல் நிறுத்தப்படும்

மேலும், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை  சமர்ப்பிக்கும்போது சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு ஆதார் அட்டை, பயன்பாட்டில் உள்ள மொபைல் போன், ஓய்வூதிய ஆணை எண் (பிபிஓ நம்பர்), ஓய்வூதியம் பெறும் வங்கி கிளையின் கணக்கு எண்   ஆகியவற்றை தவறாது எடுத்துச் செல்ல வேண்டும்

இந்தத் தகவலை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் திரு சலில் சங்கர் தெரிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close