வாக்காளர் பட்டியல் திருத்தம்: 20 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல்

  டேவிட்   | Last Modified : 08 Nov, 2018 10:40 am

20-lakhs-people-applied-for-voter-id-correction

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக தமிழகத்தில் சுமார் 20 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் 2019-ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் செய்ய கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தமிழகம் முழுவதும் 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் 1.9.2108 முதல் 31.10.2018 வரை பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று வெளியிட்டார்.

அதன்படி தமிழகம் முழுவதும் முகாம்கள் மூலமாகவும், அலுவலகங்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மொத்தம் 20 லட்சத்து 7 ஆயிரத்து 412 பேர் விண்ணப்பித்துள்ளனர். அலுவலகங்கள் மூலமாக 18 லட்சத்து 87 ஆயிரத்து 283 பேரும், ஆன்லைன் மூலமாக ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 129 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.  அதிகபட்சமாக சென்னையில் 92 ஆயிரத்து 863 விண்ணப்பங்களும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 8,631 விண்ணப்பங்களும் தாக்கல் ஆகியுள்ளன.

இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் முறையே பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, தகுதி இருக்கும் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். வீடுகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாக வந்து சரிபார்ப்பு பணியை மேற்கொள்வார்கள்.

பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு இனிமேலும் விண்ணப்பங்களை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த விண்ணப்பங்கள் வருகிற ஜனவரி 4-ந் தேதி வெளியிடப்படவுள்ள புதிய வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கு பரிசீலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.