சர்கார் விவகாரம்: அமைச்சர் சி.வி.சண்முகம் அவசர ஆலோசனை!

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 01:11 pm
minister-cv-shamugam-disscussed-over-sarkar-issue

சர்கார் படத்தில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து அமைச்சர்  சி.வி.சண்முகம், தலைமை செயலகத்தில் பிற அமைச்சர்களுடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள "சர்கார்" திரைப்படம் தீபாவளியையொட்டி நேற்று நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்து சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 

'சர்கார் படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை அவர்களாகவே நீக்கிவிட்டால் நல்லது. இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்' என நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர்  சி.வி.சண்முகம், "சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரையரங்குகள் மீது வழக்குபதிவு செய்யப்படும். சர்கார் திரைபடக்குழுவினர் தீவிரவாதிகள் போன்று செயல்படுகிறார்கள்" என தெரிவித்திருந்தார். 

இந்த சூழ்நிலையில் இன்று அமைச்சர்  சி.வி.சண்முகம், தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் சர்கார் படம் குறித்து பல அமைச்சர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close