சர்கார் படத்திற்கு எதிராக அ.தி.மு.கவினர் போராட்டம்!

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 01:11 pm

admk-protest-against-sarkar

சர்கார் பட விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், படம் திரையிட தடை விதித்து மதுரையில் அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சர்கார் படத்தில் தற்போதைய அரசியல் சூழல் தொடர்பாக இடம்பெறும் சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து அமைச்சர்  சி.வி.சண்முகம்,  தலைமை செயலகத்தில் பிற அமைச்சர்களுடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதே நேரத்தில், மதுரையில் மினிப்பிரியா தியேட்டர் முன்பு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

மேலும், சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் கண்டிப்பாக இந்தப்படம் எந்த தியேட்டரிலும் திரையிட அனுமதிக்க மாட்டோம் எனவும் காட்சிகளை நீக்கும் வரை தொடர் போராட்டம் நடைபபெறும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.