சர்காருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! மதுரையை அடுத்து கோவையில்...

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 03:57 pm
protest-against-sarkar-movie-continues-to-kovai

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி மதுரையில் அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்திய நிலையில், கோவையிலும் போராட்டம் தொடங்கியுள்ளது. கோவை சாந்தி தியேட்டர் முன்பு அ.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் சர்கார் பட பேனர்களையும் கிழித்துள்ளனர். 

சர்கார் படத்தில் இடம்பெறும் தமிழக அரசியல் குறித்த காட்சிகளை நீக்க வேண்டும் என அ.தி.மு.கவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தியதில் மதுரை சினிப்பிரியா தியேட்டரில் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இதையடுத்து, கோவையிலும் அ.தி.மு.கவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கோவை சாந்தி தியேட்டர் முன்பு அ.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் சர்கார் பட பேனர்களையும் கிழித்துள்ளனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக இன்று, சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தேவராஜன் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close