இந்தியப் பொருளாதாரம் குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றப்பட்ட நாள் இன்று! - ராமதாஸ் தாக்கு

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 04:34 pm

pmk-founder-ramadoss-tweet-about-demonetisation

மத்திய பா.ஜ.க அரசரால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட இந்நாள், இந்தியப் பொருளாதாரம் குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றப்பட்ட நாள் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

கடந்த 2016 நவம்பர் மாதம் 8ம் தேதி கருப்பணத்தை ஒழிக்கும் பொருட்டு, மத்திய அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இன்றைய தினத்தை  எதிர்க்கட்சிகள் கருப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர். 

இதுகுறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "ரூ.1000, ரூ.500 தாள்களை செல்லாததாக்கியது மட்டுமின்றி இந்தியப் பொருளாதாரமும் குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றப்பட்ட நாளின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று. சிறிய முதலீட்டில் சிறு தொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் இந்த துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்!" என்று தெரிவித்தார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.