இலவசம் வேண்டாம் என மக்கள் சொல்லட்டும்: அமைச்சர் காமராஜ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Nov, 2018 05:50 pm
kamaraj-press-meet

இலவசம் வேண்டாம் என மக்கள்தான் கூற வேண்டும், தவிர காசுக்காக நடிப்பவர், தயாரிப்பவர் எல்லாம் என சொல்ல அருகதை இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நலத்திட்டங்களையும், அவர்களையும் கொச்சைப்படுத்தி பேசுவது கண்டனத்துக்குரியது. இலவசங்களை தவிர்க்க வேண்டும் என்ற வீராப்பு வசனம் சினிமாவிற்கு வேண்டுமானால் உகந்ததாக இருக்கலாம். இலவச மடிக்கணினி, இலவச மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, சீருடைகள் என பல்வேறு நலத் திட்டங்களால் தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை உயர்கல்வியில் 48.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய அளவில் 25.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கிராமப்புறங்களில் ஆடு, கோழி போன்ற இலவசங்கள் வழங்கப்படுவதால் கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது. இலவசங்கள் வேண்டாம் என மக்கள்தான் தெரிவிக்க வேண்டுமே தவிர காசுக்காக சினிமாவில் நடிப்பவர்களும், படம் தயாரிப்பவர்களும் சொல்வதற்கு அருகதை இல்லை” என கூறினார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close